ஜேம்ஸ் பாண்ட் 50
1962-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் "டாக்டர் நோ' திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் இடம்பெற்ற "லைசன்ஸ் டு கில் 007' என்ற வாசகம் ரசிகர்களிடையே அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.


1962-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் "டாக்டர் நோ' திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் இடம்பெற்ற "லைசன்ஸ் டு கில் 007' என்ற வாசகம் ரசிகர்களிடையே அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இயான் பிளமிங் எழுதிய ஜேம்ஸ்பாண்ட் நாவல்கள் அனைத்தும் திரைப்படங்களாயின. அவரது புத்தகங்களை வாசகர்கள் தேடிப் பிடித்து படிக்கத் தொடங்கினர். முதன்முதலாக இயான் பிளமிங் எழுதிய புத்தகங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. 1952-53 ஆம் ஆண்டில் ஜமைக்காவில் உள்ள தனது "கோல்டன் ஐ' என்ற குளிர்கால மாளிகையில் தங்கி காசினோ ராயலை எழுதி முடித்தவுடன் பதிப்பகத்தில் கொடுத்தபோது 4,728 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. தற்போது அந்த ஒரிஜினல் பிரதியின் விலை 50 ஆயிரம் பவுண்டாகும்.
முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான "டாக்டர் நோ' வெளியாகி 50 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் 23-ஆவது படமாக "ஸ்கைஃபால்' வெளியாகியுள்ளது.
உண்மையில் இயான் பிளமிங் எழுதியது 13 நாவல்கள் மட்டுமே. பின்னர் திரைப்படங்களுக்காக வெவ்வேறு கதாசிரியர்கள் ஜேம்ஸ்பாண்ட் கதைகளை எழுதினர். துவக்கத்தில் ஜேம்ஸ்பாண்டாக ஷான்கானரி நடித்த படங்களுக்குக் கிடைத்த ரசிகர்களின் வரவேற்பு பின்னர் ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்சன், மைக்கேல் லான்ஸ்டேல் போன்றோர் நடித்த போது, கிடைக்கவில்லை. ரோஜர் மூரையாவது ஜேம்ஸ்பாண்டாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். தற்போது வெளிவந்துள்ள "ஸ்கைஃபால்' படத்தில் டேனியல் கிரேக் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளார்.
"டாக்டர் நோ' படத்தில் முதல் பாண்ட் கதாநாயகியாக நடித்த யூனிஸ் கேஸனுக்கு தற்போது 84 வயதாகிறது. சில்வியா ட்ரெஞ்சுச்சாக நடித்த யூனிஸ் கேஸசைத் தொடர்ந்து உர்சுலா ஆண்ட்ரஸ், ஹானர் பிளாக்மேன், பிரிட் சிக்லாண்ட், பார்பரா பாச், ஃபாம்கே ஜாசென், ஈவா கிரீன் போன்றவர்கள் பாண்ட் நாயகிகளாக நடித்திருந்தாலும் மீண்டும் 1963-ஆம் ஆண்டு ஜேம்ஸ்பாண்ட் படமான "ஃப்ரம் ரஷ்யா வித் லவ்' என்ற படத்தில் ஷான் கானரியுடன் இரண்டாவது முறையாக கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு யூனிஸ் கேஸனுக்கே கிடைத்தது.
"டாக்டர் நோ' படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்காக யூனிஸ்கேஸன் வந்தபோது செட்முழுவதும் பிரவுன் நிறத்தில் இருந்ததாம். இவர் அணிந்திருந்த உடை செட்டிற்கு பொருத்தமாக இருக்காது என்று கருதிய டைரக்டர் டெரன்ஸ் யங், உடனே டிசைனரை அழைத்து வேறு டிரஸ்ஸை ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
""உடனே பக்கத்தில் இருந்த டிரஸ் ஷாப்பில் எனக்கு பொருந்தாத மிகப் பெரிய அளவில் சிவப்பு நிறத்தில் ஒரு ஆடையை வாங்கிவந்து அட்ஜஸ்ட் செய்து அணியவைத்தனர். எப்படியோ தடுக்கிவிழாதபடி சமாளித்து அந்த காட்சியில் நடித்து முடித்தேன்'' என்கிறார் யூனிஸ்கேஸன்.
""ஷான் கானரியை பல ஆண்டுகளாக தெரியுமென்றாலும் அன்றைய படப்பிடிப்பில் மிகவும் நெர்வஸôக இருந்ததால், பலமுறை டேக் எடுக்க வேண்டியதாயிற்று. பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்வதற்குப் பதிலாக ஒத்திகையின் போது ஷான், "பாண்ட்... ஜேம்ஸ் கானரி....' என்று உளறிவைத்தார். உடனே டைரக்டர் என்னை அழைத்து அவரை செட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று ஏதாவது டிரிங்க்ஸ் கொடுத்து ரிலாக்ஸ் செய்து அழைத்துவரும்படி அனுப்பிவைத்தார். அதன் பின்னர் அந்தக் காட்சி ஒரே
டேக்கில் படமாக்கப்பட்டது..'' என்று யூனிஸ் கேஸன் நினைவு கூர்கிறார்.
ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் "டாக்டர் நோ' திரையிடப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதையொட்டியும் அதேநேரத்தில் புதிய படமான "ஸ்கைஃபால்' திரையிடுவதையொட்டியும் "புரமோஷனல் டூர்' நடந்த போது, முதல் கதாநாயகி என்ற முறையில் மற்ற நடிகர்களுடன் யூனிஸ் கேஸனும் கலந்து கொண்டாராம். "உங்களுக்குப் பிடித்த பாண்ட் திரைப்படம் எது?' என்று அடிக்கடி என்னிடம் ரசிகர்கள் கேட்பதுண்டு'. ஷான் கானரியுடன் நடித்த படம்தான் எனக்குப் பிடித்த படமாகும்.
""பிரிட்டிஷ் திரைப்படத் துறையைப் பொறுத்தவரை ஜேம்ஸ்பாண்ட் - ஷான் கானரி என்ற கூட்டணி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. தற்போது வெளிவந்துள்ள "ஸ்கைஃபாலில்' ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ள டேனியல் கிரெய்க்கின் நடிப்பை ரசிகர்கள் எப்படி ரசிப்பார்களென்று தெரியாது. ரோஜர் மூர் சொல்லியது போல், ஒவ்வொருவரும் தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்தவே விரும்புவார்கள். அது ரசிகர்களைக் கவரும் வகையில் ஃபிரஷ்ஷாகவும் இருக்கலாம்'' என்கிறார் யூனிஸ் கேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...